கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பயணியொருவர் கைது
விமானப் பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
சுமார் 53 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
கைதானவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து 38,000 சிகரெட்டுகள் அடங்கிய 179 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)