அமெரிக்காவை உலுக்கிய விமான விபத்து – காரணம் தெரியாமல் குழப்பமடைந்த அதிகாரிகள்
அமெரிக்காவின் பிலடெல்பியா விமான விபத்துக்கு காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 7 பேரை பலி கொண்ட விமான விபத்தில், கருப்புப்பெட்டியை கண்டுபிடித்தால் மட்டுமே, விபத்துக்கான காரணம் தெரியும் என, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமான என்.டி.எஸ்.பி. அறிவித்துள்ளது.
விமானம் விழுந்த இடத்தில் பல அடி ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் விழுந்தது.
இந்த நிலையில், கருப்புப்பெட்டி உடைந்து நொறுங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும், கருப்புப் பெட்டி குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால் தகவல் அளிக்கலாம் என்றும், என்.டி.எஸ்.பி. தலைவர் ஜெனிபர் ஹோமண்டி தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)