சீனப் புத்தாண்டில் நேர்ந்த விபரீதம் – தொண்டையில் சிக்கிய மீன் முள் – 17 பேர் அவதி
சீனாவின் Zhejiang பகுதியில் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனப் புத்தாண்டிற்கு முன்தினம் 17 பேர் தொண்டையில் மீன் முள் சிக்கி அவதியுற்றதாக தெரியவந்துள்ளது.
ஜனவரி 28ஆம் திகதி மாலை 6.30 மணியிலிருந்து மீன் முள் தொண்டையில் சிக்கியதால் பலர் அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். அவர்களில் பலர் நடுத்தர வயதினரும் இளைஞர்களுமாவர்.
உணவு உண்டபோது பேசியதாலும் விளையாடியதாலும் அவ்வாறு நேர்ந்ததாய்த் தெரிதெரிவிக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு முதல் இத்தகைய சம்பவங்களில் சுமார் 30,000 மீன் முள்கள் அகற்றப்பட்டுள்ளது.
புத்தாண்டின்போது பெரும்பாலான சீனர்கள் மீன்களை விரும்பி உண்பது வழக்கம். பிறக்கின்ற புதிய ஆண்டு செழிப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்வதாக நம்பப்படுகிறது.
(Visited 4 times, 4 visits today)