Champions Trophy – தொடக்க விழாவை ரத்து செய்த ICC

9வது ICC சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ICC அறிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு வெவ்வேறு தேதிகளில் அணிகளின் வருகை காரணமாக தொடக்க விழா மற்றும் கேப்டனின் அதிகாரபூர்வ கூட்டம் நடத்த சாத்தியமில்லை. இதனால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
(Visited 39 times, 1 visits today)