இலங்கை: காலியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறதுே
சம்பவத்தில் உயிரிந்த இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 23 times, 1 visits today)