இந்தோனேசியாவில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்ய தயாராகும் இலங்கை அரசாங்கம்!

தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தோனேசியாவிலிருந்து தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கூட்டு பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் இந்த தகவல் வந்துள்ளது,
ஆராய்ச்சியின்படி, தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தோனேசியா மிகவும் பொருத்தமான நாடு” என்று தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
தேங்காய் பொருட்களின் இறக்குமதியை மட்டும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)