வட அமெரிக்கா

கேபிடல் கலவரம் தொடர்பாக டிரம்ப்பின் கணக்குகள் முடக்கம்; சமரசத் தொகையாக 33.7 மில்லியன் வழங்கும் மெட்டா

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுகொள்ள முடியாத டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதற்கு அவர் பேச்சுகளும் பதிவுகளுமே காரணம் எனக் கருதிய சமூக ஊடகத் தளங்களான ‘ஃபேஸ்புக்’, முன்பு ‘ட்விட்டர்’ என அழைக்கப்பட்ட ‘எக்ஸ்’ ஆகியவை டிரம்ப்பின் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கின.

இதை எதிர்த்து 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், டிரம்ப் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கைச் சுமுகமாகத் தீர்க்க முடிவுசெய்த ஃபேஸ்புக் உரிமையாளரான ‘மெட்டா’ நிறுவனம் அவருக்குக் கிட்டத்தட்ட US$25 மில்லியன் (S$33.7 மில்லியன்) வழங்க ஒப்புக்கொண்டதாக ஜனவரி 29ஆம் திகதி தெரிவித்தது.

இந்தச் சமரசத் தொகையில், 22 மில்லியன் அமெரிக்க டொலர் டிரம்ப்பின் அதிபர் நூலகத்திற்கான நிதியாகவும் மீதமுள்ளவை வழக்கில் உள்ள பிறதி வாதிகளுக்கும் சட்ட ஆலோசனைப் பெற்றதற்கான கட்டணமாகவும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் சமரசம் தொடர்பான அறிக்கை ஒன்றை மெட்டா நிறுவனம் தாக்கல் செய்தது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்