கோலாகலமாக லூனார் புத்தாண்டை வரவேற்ற மக்கள்
ஆசியா மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சந்திர நாட்காட்டியின் முதல் அமாவாசையுடன் இணைந்த சந்திர புத்தாண்டை வரவேற்றனர்.
ஆசியாவில் பலருக்கும், உலகெங்கிலும் உள்ள சில ஆசிய சமூகங்களுக்கும் ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வாக பரவலாகக் கருதப்படும் சந்திர புத்தாண்டு, கொண்டாடுபவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.
வழக்கமாக சுமார் 15 நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் தொடங்கியதால், ஆசியா முழுவதும் தெருக்களில் பட்டாசுகள், இசை, கண்காட்சிகள், விளக்குகள் நிறைந்திருந்தன.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படும் நிலையில், இவர்கள் டிராகன் ஆண்டுக்கு விடைகொடுத்து பாம்பு ஆண்டை வரவேற்றுள்ளனர்.





