தெற்கு சூடானின் தொலைதூரப் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலி
தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது.
சூடானின் வடபகுதியில் அமைந்துள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.
விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதி அருகே இன்று விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் ரேடியோ மிராயா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை. விமான விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 41 times, 1 visits today)





