தென் கொரியாவில் தீப்பற்றிய விமானம் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 169 பயணிகள்

தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் Air Busan விமானம் ஒன்று நேற்று தீப்பிடித்துள்ளது.
விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தின் வால் பகுதி தீப்பற்றியதாகக் கூறப்பட்டது. Jeju Air விமான விபத்து நடந்து ஒரு மாதமாகிறது.
அந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் மட்டுமே உயிர்தப்பினர்.
(Visited 27 times, 1 visits today)