பிரித்தானிய அமைச்சர் இலங்கை பிரதமருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்திற்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமத்துவம் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தேசிய முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் உள்ள சமூகப் பொறுப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)