தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் அபிராமிப்பட்டர் விழா

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நாளை (29) அபிராமிப்பட்டர் விழா இடம்பெற உள்ளது.
அமாவாசை தினத்தை தனது பக்தியால் பௌர்ணமி தினமாக்கிய அபிராமிப்பட்டர் விழா நாளை, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற உள்ளது.
நாளை மாலை 3 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி, மாலை 3.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு, மாலை 4.30 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற உள்ளன.
இதைத் தொடர்ந்து, அம்பாள் அபிராமிப்பட்டருடன், உள்வீதி வலம்வரும் அற்புதக்காட்சியும் நடைபெறும் என்று தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபை அறிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)