பிரான்ஸில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல் தீவிரம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
பிரான்ஸில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய, அதற்கான தடுப்பூசி போடும் பணி மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் புழக்கம் பிரான்ஸின் பிரதான நிலப்பகுதியிலும் வெளிநாடுகளிலும் இன்னும் தீவிரமாக உள்ளது.
பிரான்ஸில் இந்த வைரசினால் 4 தொடக்கம் 15 வயதுக்குட்பட்டவர்கள் பெருமளவில் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரத்தில் 14,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4.3% சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





