தனிப்பட்ட தகவல்களை வெளியிட்ட LinkedIn? ஒரு பில்லியன் பேர் சிக்கிலில்

LinkedIn தளத்தில் அனுப்பிய குறுந்தகவல்களை அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிக்காக மற்ற நிறுவனங்களோடு பகிர்ந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் நிறுவனம் தரவுகளைப் பாதுகாக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது.
அதன் வழி தளத்தைப் பயன்படுத்துவோரின் அனுமதியின்றி அவர்களது தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் பகிரப்பட்டதை மூடி மறைக்க LinkedIn தளத்தில் இடம்பெற்றுள்ள தரவுப் பாதுகாப்பு வழிகாட்டி திருத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என LinkedIn நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
1 பில்லியனுக்கும் அதிகமானோர் LinkedIn பயன்படுத்துகின்றனர். அவர்களில் சுமார் 250 மில்லியன் பேர் அமெரிக்காவில் இருக்கின்றனர்.
LinkedIn நிறுவனம் 2023ஆம் ஆண்டுச் சந்தாவில் பெற்ற பணம் 1.7 பில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.