INDvsENG – இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ரன்னில் வெளியேறினார்.
இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் திலக் வர்மா அதிரடியாக ஆடின் அரை சதம் கடந்தார். 6வது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்தியா 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 72 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.