இங்கிலாந்தில் மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் பலி
மேற்கு யார்க்ஷயரில் ஒரு கார் சாலையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
வேக்ஃபீல்டில் நடந்த விபத்தில் 19 வயதுடைய இரண்டு பயணிகளும் 18 வயதுடைய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மேற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
வெஸ்ட் பிரெட்டன் கிராமத்திற்கு அருகே கருப்பு நிற சீட் இபிசா காரில் ஐந்து பேர் பயணித்து கொண்டிருந்தனர்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் உள்ளார், மற்றொரு பயணி லேசான காயங்களுக்கு ஆளானார் என்று போலீசார் தெரிவித்தனர்.
(Visited 47 times, 1 visits today)





