சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிப்பு
சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே, சீன இறக்குமதிகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப் போவதாக அவர் எச்சரித்தார்.
இருப்பினும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீனா மீது 60 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை விதிப்பதாக டிரம்ப் உறுதியளித்தார்.
இருப்பினும், வரி விதிப்பு தொடர்பான எந்த நிர்வாக உத்தரவுகளிலும் டிரம்ப் கையெழுத்திடவில்லை.
இந்த வரிகள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)