இலங்கையில் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்
கல்வி முறையில் போட்டித்தன்மையைக் குறைக்க 2026 முதல் கல்வி சீர்திருத்த செயல்முறையை திருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.
அதற்கமைய, தற்போதுள்ள கல்வி முறையை மாணவர் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் மாற்றுவதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் பொருத்தமானதாக மாற்ற தாம் விரும்புவதாகவும், அந்தப் பாடங்களை ஒருபோதும் நீக்க எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் கூறினார்.
மூன்று பகுதிகளில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்தில் தலையிட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, பாட உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.