லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீ : 31000 பேர் வெளியேற்றம்!
லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கு பகுதியில் புதிதாக காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸ்டாயிக் ஏரிக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளை கொடூரமான தீப்பிழம்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆறு மணி நேரத்தில் 3,884 ஹெக்டேர் பரப்பளவிற்கு வேகமாக பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
இந்த வார இறுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் நச்சு சாம்பல்கள் நீரோட்டத்துடன் கலப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தடுப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே சுமார் 56 கிலோமீட்டர் தொலைவில், சாண்டா கிளாரிட்டா நகருக்கு அருகில் வசிக்கும் 31000 மக்களை வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





