ஐசிசி தரவரிசை பட்டியல் முதலிடத்தில் தொடரும் பும்ரா
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா (837) 3-வது இடத்திலும் உள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி 761 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
(Visited 2 times, 2 visits today)