ஜெர்மனியில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : 1000 பேர் முன்னிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு!
ஜெர்மனியில் 1,000 நேரடி ஒளிபரப்பு பார்வையாளர்கள் முன்னிலையில், திருமணமான ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக யுவதி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த திருமணமான நபரை டேட்டிங் App மூலமாக சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
31 வயதான வழக்கறிஞர் பெண் ஒருவர் 46 வயதான பன்டேஸ்வெர் அதிகாரியை மே 2022 இல் சந்தித்ததாகக் கூறினார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை டைர்கார்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. பிரதிவாதி வேலைக்காக பெர்லினுக்கு அடிக்கடி சென்றபோது அவர்களுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டதாகவும், நகரத்தின் மிட்டே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்திக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நேரடி ஒளிபரப்பை இயக்கி, சுமார் 1,000 பேர் ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருக்கும்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதிவாதி, “நான் ஏழு ஆண்டுகளாக பாலியல் தளத்தில் என் மனைவியுடன் ஜோடி சுயவிவரத்தை வைத்திருக்கிறேன் எனவும், அதில் அனைவரும் அவ்வாறாக உறவு வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பெர்லினைச் சேர்ந்த அந்தப் பெண் ‘மிக விரைவாக ஆடைகளை அவிழ்த்துவிட்டார்’ என்றும், இணையத்தில் நேரடியாக உடலுறவு கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவளது உணர்வுகள் குறித்து கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் ஒப்புக்கொண்டதாக தெரிவித்த அவர், தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.