இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி உதவி – உலக வங்கி உறுதி!
அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் கூறுகிறார்.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தூய்மையான இலங்கை, கிராமப்புற வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு மேம்பாடு ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
உலக வங்கி இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட கடன் உதவியை சரியான நேரத்தில் வழங்கும் என்றும் மார்ட்டின் ரைசர் கூறியுள்ளார்.