இலங்கை – அஸ்வெசு திட்டத்தை மறுபரிசீலணை செய்யும் அரசாங்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு!
அஸ்வெசும உள்ளிட்ட நிவாரண உதவி செயல்முறையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தகுதியுடையவர்களாக இருந்தும் இன்னும் சலுகைகள் பெறாதவர்களைச் சேர்ப்பதற்கான விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான மேல்முறையீடுகள் “2024 ஆம் ஆண்டிற்கான தொகையை விட அதிகமாக 2025 ஆம் ஆண்டில் முறையாக மதிப்பாய்வு செய்து சரியான முறையைப் பின்பற்றிய பிறகு வழங்குவோம் என்று நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.





