அமெரிக்காவில் ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பதவியேற்றுள்ளார்.
இதன் ஊடாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்படி அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, அவர் கையெழுத்திட்ட தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)