உலக நாடுகளில் கடைகளில் அதிகம் திருடப்படும் பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கடைகளில் இருந்து அதிகம் திருடப்படும் பொருட்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
World of Statistics வலைத்தளத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, அமெரிக்காவில் இறைச்சி அதிகமாகத் திருடப்படுவதாகவும், பிரான்ஸ் மற்றும் கனடாவில் சீஸ் அதிகமாகத் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இங்கிலாந்தில் பொட்டலமிடப்பட்ட இறைச்சிகளும், ஜெர்மனியில் சாக்லேட்டுகளும் அடிக்கடி திருடப்படும் பொருட்களில் அடங்கும்.
மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில், சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் முறையே திருடர்களால் அடிக்கடி திருடப்படும் பொருட்கள் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான பால் பொருட்கள் அதிகமாக திருடப்படுவது தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களை திருடர்கள் திருடி வருவது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.