கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் உட்பட இருவர் – அதிகாரிகள் அதிர்ச்சி
இரண்டு விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
66.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
முதல் பயணி ஹம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஆவார், அவர் தற்போது கொஸ்கமாவில் உள்ள சாலாவ இராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார்.
மற்ற பயணி அம்பாறை, மஹாஓயாவைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பெண், அவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் இருவரும் நேற்று பிற்பகல் 10.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களில் 6 கிலோகிராம் 630 கிராம் எடையுள்ள “குஷ்” என்ற போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது, மேலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட “குஷ்” போதைப்பொருட்களின் மதிப்பு 66.3 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட உள்ளனர்.