ஆப்கானில் பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க அழைப்பு விடுத்துள்ள தாலிபான் துணை வெளியுறவு அமைச்சர்
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பு அந்நாட்டுப் பெண்கள் உயர்க் கல்வி கற்கத் தடை விதித்துள்ளனர். இதற்கு அந்நாட்டுத் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் பெண்கள் உயர்க் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசாங்கம் விலக்கிகொள்ள வேண்டும். விரைவில், பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க தலிபான் மூத்த தலைமை அனுமதி வழங்க வேண்டும்,” என அவர் கூறியதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகமான ‘டோலோ’ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அந்நாட்டு அனைத்துலக அரங்கில் தனிமைப்பட்டிருப்பதற்குத் தலிபானின் இந்தக் கொள்கை முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அந்நாட்டில் பெண்கள் 6ஆம் வகுப்பு வரை கல்வி கற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மேலும், “40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில், 20 மில்லியன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல்,” என அவர் ஆப்கான் பெண்களைக் குறிப்பிட்டு கூறினார்.