கனடாவில் வீட்டிற்கு வெளியே சிதறி கிடந்த விண்கற்கள் – ஆச்சரியத்தில் தம்பதி
கனடாவில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே சிதறி விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியுடன் மோதியதால் விண்கற்கள் சிதறி ஒரு வீட்டிற்கு வெளியே விழுந்துகிடந்ததாக தெரியவந்துள்ளது.
வீட்டின் கதவில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் அந்த அரிய சம்பவம் ஒலியுடன் பதிவாகியிருந்தது.
லோரா கெலி என்ற பெண்ணும் அவருடைய கணவரும் வெளியே சென்று மாலை வீடு திரும்பினர். வீட்டின் நடைபாதையில் தூசியும் விசித்திரமான பொருள்களும் சிதறி கிடந்தன.
பிறகு கேமராவைப் பார்த்ததில் எதோ ஒரு பொருள் வீட்டின் நுழைவாயிலில் மோதிச் சத்தமும் புகை மூட்டமும் எழுந்தது தெரியவந்தது.
இருவரும் அந்தச் சம்பவத்தை விண்கற்களை ஆராயும் பல்கலைக்கழகத்திடம் தெரிவித்தனர்.
அங்குள்ள அதிகாரிகள் சிதறிக் கிடந்த பொருள்களை ஆராய்ந்து அவை விண்கற்கள் என்று முடிவுசெய்தனர்.
(Visited 13 times, 13 visits today)