இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்
இலங்கை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
பிக் பாஷ் லீக் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு வலது முழங்கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்மித், சிட்னி தண்டர் அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தின் போது சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக ஸ்மித் துபாயில் உள்ள அணியின் பயிற்சி முகாமுக்கு புறப்படுவது தாமதமாகியுள்ளது. ஏனெனில் அவர் ஒரு நிபுணரிடம் மதிப்பீட்டை நாடுகிறார்.
இந்த வார இறுதியில் அணியில் சேருவது குறித்து ஸ்மித் நம்பிக்கையுடன் இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)