ஆப்பிரிக்கா

மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்களை கொலை செய்வதற்கு திட்டம்

மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

2030 ஆண்டு கால்பந்து உலக கோப்பை தொடர், ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

இதன் காரணமாக இந்த நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில், தங்கள் நாட்டிலுள்ள 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் நடவடிக்கையில், மொராக்கோ அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நச்சுத்தன்மை வாய்ந்த ராசாயனத்தை செலுத்தியும், சுட்டும், அடித்தும் நாய்கள் கொலை செய்யப்படுவதாக, அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல், பிரபல விலங்கு உரிமைகள் வழக்கறிஞருமான ஜேன் குடால், நாய்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டுமென, FIFAவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு