உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியானது
உலகின் மிகப் உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியானது
உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு சிற்றரசின் டுபாய் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.
OAG எனும் உலகப் பயணத் தரவு நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
சர்வதேச விமானச் சேவைகளின் விமான இருக்கைகளைக் கருத்தில்கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன.
அதற்கமைய, உலகின் மிகப் பரபரப்பான 5 விமான நிலையங்களின் பட்டியலுக்கமைய,
1. ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்துலக விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 60,236,220
2. பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 48,358,450
3. தென் கொரியாவின் இன்ச்சியோன் விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 41,633,831
4. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 41,530,309
5. நெதர்லந்தின் ஆம்ஸ்டர்டம் ஷிபோல் விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 39,998,853