பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானுக்கு நில ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ரியல் எஸ்டேட் அதிபருக்கு சலுகைகள் வழங்குவதற்காக நிலம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது.
72 வயதான அவர் 2022 இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)