இலங்கையின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்க வாய்ப்பு!
இலங்கையின் பல பகுதிகளில் நாளை (18) முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் வாய்ப்பு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.