Eiffel கோபுரத்தை நோக்கிச் செல்லும் விமானம் – Pakistan விமான விளம்பரத்தால் சர்ச்சை
பாகிஸ்தானின் தேசிய விமானச் சேவையான Pakistan International Airlinesஇன் விளம்பரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்துக்கும் பாரிஸுக்கும் இடையே நேரடி விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
Eiffel கோபுரத்தை நோக்கி விமானம் பறப்பதைப் போல் சித்திரிக்கும் விளம்பரத்தை Pakistan International Airlines X தளத்தில் வெளியிட்டது.
விளம்பரத்தில் ‘பாரிஸ், நாங்கள் இன்று வருகிறோம்’ என்ற வார்த்தைகளும் இடம்பெற்றன.
அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி உலக வர்த்தக நிலையத்தில் (World Trade Center) நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அது நினைவூட்டுவதாக இணையவாசிகள் பலர் சாடினர்.
இந்த விளம்பரம் நல்ல யோசனை என்று கூறியவர் யார்?, விமானம் Eiffel கோபுரத்தை நோக்கிச் செல்கிறது! நிர்வாகத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லையா?” என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் விளம்பரத்துக்கு எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதை விசாரிக்கும்படிப் பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உத்தரவிட்டுள்ளார்.