இலங்கை செய்தி

இலங்கை: சட்டவிரோத மான் மற்றும் மறை கொம்புகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் மான், மறை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புத்தளம் – கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, ஒன்பது அடுக்கு மான் கொம்பு, ஒரு அடுக்கு ஒற்றை மான் கொம்பு, மறை கொம்பு, எருமை கொம்பு மற்றும் விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட king conch seashell சங்குகள், சந்தேக நபர்கள் பாவித்த கைத்தொலைபேசிகள், சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை