விரைவுப் பாதை குடியேற்ற திட்டத்தை விரிவுப்படுத்தும் இந்திய அரசாங்கம்!
இந்திய அரசாங்கம் தனது விரைவுப் பாதை குடியேற்றம் – நம்பகமான பயணி திட்டத்தை (FTI-TTP) ஏழு கூடுதல் விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இது இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டைதாரர்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதியை உறுதி செய்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விமான நிலையங்கள் வருமாறு,
மும்பை
சென்னை
கொல்கத்தா
பெங்களூரு
ஹைதராபாத்
கொச்சி
அகமதாபாத்
உலகத் தரம் வாய்ந்த குடியேற்ற வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் ‘விக்சித் பாரத்’ 2047 முயற்சியின் ஒரு பகுதியாக, விரைவுப் பாதை குடியேற்றம் – நம்பகமான பயணி திட்டம் (FTI-TTP) இறுதியில் நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.