தென்கொரியாவில் ஊழல் தடுப்பு அலுவலகம் முன் தீக்குளித்த நபர்
தென்கொரியாவின் ஊழல் தடுப்பு அலுவலகத்தின் முன் நபர் ஒருவர் தீக்குளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் புதன்கிழமையன்று (ஜனவரி 15) நிகழ்ந்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த அலுவலகத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
கிளர்ச்சியில் ஈடுபட்டதாக அதிபர் யூன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதியன்று அவர் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றார்.
இந்நிலையில், 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட நபர் ஒருவர் தீக்குளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.அவருக்கு மிகக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
யூன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)