சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை தடுக்கும் விதிகளை நீக்க நடவடிக்கை
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பைத் தடுக்கும் வகையிலான விதிமுறைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பிலான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுல்லிவான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்க – இந்திய சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு தொலைநோக்கு பார்வை சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் வகுக்கப்பட்டது.
இதனால் அமெரிக்க-இந்திய முன்னணி நிறுவனங்களுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு நீண்ட காலமாகத் தடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிகள் அந்த விதிமுறைகளில் உள்ளன.
அவற்றை நீக்குவதில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. இதற்கேற்ப முறையான ஆவணங்கள் விரைவில் தயாரிக்கப்படும்.
கடந்த காலப் பலவீனங்களை திருத்தி, அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவனங்களை அப்பட்டியல்களிலிருந்து நீக்கி அமெரிக்காவுடன் விரிவான ஒத்துழைப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இதன் ஊடாக உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். (ரொய்ட்டர்)