இலங்கை செய்தி

சம்மாந்துறை சிறுமி மீது பாலியல் சேட்டை : 69 வயது லொத்தர் வியாபாரி கைது 

வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (13) 9 வயதுடைய சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியைத்தேடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீரமுனைப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் அம்பாறை பிரதேசத்தைச்சேர்ந்த (வயது 69) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!