ஹசீனா மற்றும் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்த வங்கதேசம்
வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் பிரிட்டிஷ் அரசாங்க அமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
77 வயதான ஹசீனா, ஆகஸ்ட் 2024 இல் ஒரு புரட்சியில் இருந்து அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்த வழக்குகள் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியில் இலாபகரமான நிலங்களை பெரிய அளவில் அபகரித்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
“ஷேக் ஹசீனா, சில அதிகாரிகளுடன் இணைந்து, தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலங்களை ஒதுக்கினார்,” என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் (ACC) இயக்குநர் ஜெனரல் அக்தர் ஹொசைன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
வழக்கில் பெயரிடப்பட்டவர்களில் ஹசீனாவின் மருமகள், பிரிட்டிஷ் ஊழல் எதிர்ப்பு அமைச்சர் துலிப் சித்திக் ஆகியோரும் அடங்குவதாக ஹொசைன் குறிப்பிட்டார்.