Champions Trophy – ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த மாதம் 19ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
இதற்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்துள்ளார். அத்துடன் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி விவரம்:-
கேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலேக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், லபுசேன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.
குரூப் “பி”யில் ஆஸ்திரேலியா இடம் பிடித்துள்ளது. பிப்ரவரி 22ந்தேதி இங்கிலாந்தையும், பிப்ரவரி 25ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும், 28ந்தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
(Visited 30 times, 2 visits today)