இலங்கை செய்தி

இலங்கை 119 இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்ற நபர்

இலங்கை பொலிஸாரின் துரித இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் 119 என்ற துரித இலக்கத்திற்கு 12 தடவைகள் அழைப்பை ஏற்படுத்தி, பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.

திருப்பனே – பெதிஸ்ரம்பேவ பகுதியில் வசிக்கும் ஒருவரையே இவ்வாறு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர், கடந்த டிசம்பர் மாம் 18 ஆம் திகதி, 119 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, திருப்பனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு குற்றங்களும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் குற்றமிழைத்திருப்பதால், அவரை கைது செய்து நீதிமன்றில் பிரசன்னப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை