ஜெர்மனி வாழ் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை! சலுகைகள் நிறுத்தப்படும் அபாயம்
ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலின் வெளிநாட்டவர்களுக்கு ஆபத்தாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகலிட கோரிக்கை மற்றும் அரசினால் வழங்கப்படும் சமூக உதவி தொகை தொடர்பில் தேர்தல் பரப்புரைகளில் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சமூக உதவி பணம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பல கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
பொது தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என பிரதான எதிர் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜெர்மனில் அகதியாக குடிரிமை பெற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவா்கள் என கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டு வரி வருமானத்தை தரக்க்கூடிய சொந்த வருமானத்தில் வாழாமல், அரச உதவியின் கீழ் வாழ்வோருக்கு வதிவிட விசா வழக்கப்பட மாட்டாது என கிறிஸ்தவ-சமூக ஒன்றிய கட்சி எச்சரித்துள்ளது.
போதியளவு வருமானம் இல்லாதவர்களுக்கு வதிவிட விசா வழங்க கூடாது எனவும் அந்தக் கட்சியின் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஜெர்மனியில் புகலிடம் கோரிய நிலையில் அது மறுக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும். அவ்வாறு செல்ல மறுப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று கருத்தும் தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலுக்கு பின் வெளிநாட்டவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அபாயம் நிலவி வருகின்றது