2025 IPL ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான IPL 18வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் 639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இந்நிலையில் IPL தொடரின் 18-வது சீசன் தொடங்கும் தேதியை BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா இன்று அறிவித்துள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற BCCI நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த வருடம் (2025) மார்ச் 23ம் தேதி 18வது IPL சீசன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)