ஜெர்மனியில் இருந்து 18000 பேர் நாடு கடத்தல் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியில் இருந்து 18000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஜெர்மனியில் இருந்து 18000 பேர் தங்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஜெர்மனிக்கு பொறுப்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது நாடு கடத்தலானது 21 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தமாக 15155 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையானது 16430 ஆக காணப்பட்டதாகவும், 2019 ஆம் ஆண்டுஇந்த எண்ணிக்கையானது 25325 ஆக காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இந்த தொகை 22000 ஆக காணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு கடத்த உத்தேசிக்கப்பட்ட நிலையில் 62 சதவீதமான நாடு கடத்தல் நடவடிக்கையானது சாத்தியமடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை 38328 பேரை நாடு கடத்துவதற்கு எண்ணி இருந்ததாகவும், 23610 நாடு கடத்தல் நடவடிக்கைகள் சாத்தியமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி அரசாங்கமானது நாடு கடத்தில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.