கடவுச்சீட்டில் எழுதிய பெண்ணுக்கு நேர்ந்த கதி – லண்டனுக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

போலந்துக் குடிநுழைவு அதிகாரிகள், கடவுச்சீட்டில் எழுதிய பயணிக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் புதன்கிழமை விமானம் வழி லண்டனிலிருந்து போலந்திற்குச் சென்றார்.
அவரது கடவுச்சீட்டின் குடிநுழைவு முத்திரைகளுக்குக் கீழே விமான நிலையப் பெயர்களும் இடங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அவரைத் தடுத்தனர்.
கடவுச்சீட்டில் எழுதக்கூடாது என்பது தமக்குத் தெரியாது என அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் விமான நிலையத்திலேயே இருக்க நேர்ந்தது. நேற்று முள்தினம் அவர் லண்டனுக்கு விமானம் வழி திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 59 times, 1 visits today)