உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்துமா HMPV வைரஸ்? : நிபுணர்களின் கணிப்பு!
சீனாவில் பரவிவரும் HMPV வைரஸ் உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்தாது” என்று ஒரு முன்னணி சுகாதார நிபுணர் நம்புகிறார்.
மருத்துவமனை படுக்கைகளில் உள்ள குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதை காட்டும் படங்கள் வெளியாகியதை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இது கோவிட்-19 பாணி தொற்றுநோய்க்கான அச்சத்தை எழுப்பியுள்ளது. சில மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, பல நோயாளிகள் வைரஸ் பரவலை மெதுவாக்க முகமூடிகளை அணிந்துள்ளனர்.
இருப்பினும், HMPV ஒரு புதிய வைரஸ் அல்ல என்றும் நிச்சயமாக கோவிட் போன்றது அல்ல என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவும் பிற நாடுகளும் பொதுவாக குளிர்காலத்தில் காணப்படும் பருவகால காய்ச்சல் போன்ற HMPV அதிகரிப்பை அனுபவித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு சீனாவில் தற்போதைய அதிகரிப்பு மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.