புலம்பெயர்வோரை குறைக்க பிரித்தானியா கையில் எடுத்த அணுகுமுறை : புதிய விண்ணப்பங்களில் ஏற்பட்ட பாரிய சரிவு!
சட்டப்பூர்வ இடம்பெயர்வு அளவைக் குறைக்கும் முயற்சியில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இங்கிலாந்தில் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400,000 குறைந்துள்ளது.
தற்காலிக உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள், ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2024 க்கு இடையில் 547,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகக் காட்டுகின்றன. இது கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பாரிய அளவில் குறைந்துள்ளது. 2023 ஆம் ஆ்ண்டு 942,500 ஆக பதிவாகியது.
வருடத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை 300,000 குறைப்பதே இதன் நோக்கமாகும்.நாட்டிற்கு வர விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பராமரிப்பு ஊழியர்களின் எண்ணிக்கையில் 42% சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் முன்னாள் கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், சட்டப்பூர்வமாக பிரிட்டனுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு பராமரிப்பு ஊழியர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வருவதற்கான தடை மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பை £38,700 ஆக உயர்த்தியது ஆகியவை குடியேற்றிகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.