ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஆபாசப் பட நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பை மறைக்க அவருக்கு டிரம்ப் 1,30,000 டொலர்கள் வழங்கியதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்பை நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் சிறைத்தண்டனை மற்றும் அபராதமின்றி விடுவித்தது.
இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில், டிரம்ப் முதல் முறையாக இந்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இருப்பதால் அவருக்கு சிறைவாசம் இல்லை என கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் சட்டவிரோதமானவை என்றும் கூறினார்.