மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர்!
பிரான்சில் மாணவர்களுடைய பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் விக்டர் (29). அவர், தன் வகுப்பில் பயிலும் 63 மாணவர்களுடைய ஆங்கில விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.பிரான்சின் கல்வி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விக்டர் இவ்வாறு செய்துள்ளார்.
விக்டர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட உள்ள நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 160,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் அரசு சட்டத்தரணி அலுவலகமும், பள்ளிக்கல்வித்துறையும் தெரிவித்துள்ளன.
பிரான்சில் கல்வி அமைப்பு மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ள விக்டர், ஆங்கில வகுப்புகளைப் பொருத்தவரை மாணவர்கள் நிலை மோசமாக உள்ளது என்றும், ஏழு ஆண்டுகள் ஆங்கிலம் கற்ற மாணவர்களுக்கு, இரண்டு வார்த்தைகளை சேர்த்து எழுதக்கூடத் தெரியவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.